About Us
Our Mission& Vision
உணவில்லாமல் பட்டினி கிடக்கும்
நமது நாட்டு ஏழைகளுக்கு நாம் உதவிட துவங்கப்பட்டதே நமது ATVS TRUST .
நமது வாழ்க்கை நமக்கு கற்றுத் தந்த அனுபவத்தாலும், குரு நமக்கு கற்றுத் தந்த மனயோகத்தால் வந்த ஆற்றலாலும், பணக்காரர்களின் மனதை திருப்பி, பணம் திரட்டி, ஊர் ஊராகச் சென்று ஏழைகளுக்கு தொண்டுபுரிய வேண்டும் என்னும் எண்ணம் உள்ளவர்களை ஒன்றுசேர்த்து விவேகா சேவகர் குழு அமைத்து மக்கள் சேவையே மகேஷன் சேவை என நாங்கள் செயல்படுகிறோம்.
“மக்கள் சேவையே மகேசன் சேவை”
நாம் என்ன செய்கிறோம்
🌀அன்பு நண்பர்களே🌀
🌀தொண்டு செய்யுங்கள் !
🌀பேரானந்தம் அடையுங்கள் !!
*உங்கள் அன்பு மனதை கேட்டுப் பாருங்கள், அது சொல்லும், என்னால் முடிந்த வரை நான் யாருக்காவது உதவ வேண்டும் என்று.*
*எமது வலைபதிவை முழுவதுமாக படியுங்கள், நல்ல முடிவு எடுங்கள், இது உங்களால் தான் முடியும்*
அன்னதான சேவை
கல்வி சேவை
மருத்துவ சேவை
கலாச்சாரம் - ஆன்மீக மேம்பாடு
கிராமப்புற மேம்பாடு
தொண்டர்,
தொண்டு என்பது எல்லோராலும் செய்துவிடக்கூடிய செயல் இல்லை. அதற்கென்று மனமும், மனிதநேயமும் வேண்டும். தொண்டு என்பது தொழில் அல்ல. தொழிலுக்கு லாப நஷ்ட கணக்குகள் உண்டு. தொண்டிற்கு என்றைக்கும் தோல்வி இல்லை என்பதனை நினைவில் வைத்து எங்களுடன் சேர்ந்து சேவை செய்ய வாருங்கள்..
நன்கொடையாளர்,
இந்திய அரசின் பரிந்துரைகளின்படி “அன்புடன் தரும் விவேகானந்தா சேவா அறக்கட்டளை”யின் லாப நோக்கமற்ற சேவைக்கு நீங்கள் நன்கொடை நிதி வழங்கலாம். உங்களது 100% பங்களிப்பு மூலம் லாப நோக்கற்ற சேவைகளுக்கு அந்த நன்கொடை பயன்படுத்தப்படும். இந்திய வரிச் சட்டத்தின்படி, நன்கொடைகளைப் பெற்றதுமே, எமது ATVS TRUST ஆனது தனிப்பட்ட சட்டரீதியான நன்கொடை ரசீதை தங்களுக்கு கொடுக்கும்.
எனது நன்கொடைக்கு வரிவிலக்கு உள்ளதா? என்ற உங்களது கேள்விக்கு பதில் இதுவே
நன்கொடையாளர் ஆகிய
நீங்கள் எமது அரசு சாரா தொண்டு அமைப்புக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு அளிக்கப்படும், எனினும் உறுதியாகத் தகவலைத் தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட வல்லுநருடன் கலந்தாலோசிக்கவும்.
உறுப்பினர்
விவேகா சேவகர் குழுவில் நாம் ஒன்றாக சேர்ந்தால்
ஒரு வித்தியாசத்தை கொண்டுவர முடியும்,
சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
சுவாமி விவேகானந்தரின் இந்திய செய்திகளை
உலகம் முழுதும் பரப்ப முடியும்.
– குருஜி மல்லூர் சித்தர்
Give
மக்கள் சேவையில்
எங்களுடன் சேர்ந்து செயலாற்ற
உங்களை அன்புடன்
வரவேற்கிறோம் !
நீங்கள் இப்போது இணைய தளம் மூலமாகவும் நன்கொடை அளிக்கலாம்.
Support Us
ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க
₹600K க்கு மேல்
நிதி திரட்டிக் கொண்டிருக்கிறோம்.
இத்திட்டத்தின் மூலம் அவரவர் விருப்பத்திற்கேற்ப தனது பிறந்தநாள், திருமண குழந்தையின் பிறந்தநாள், பெற்றோரின் பிறந்தநாள் மற்றும் இதர விசேஷ நாட்களில் கொண்டாடும் விதமாக நபர் ஒருவர் ரூபாய் 600 நன்கொடையாக வழங்கலாம். அதன் மூலம் ஆதரவற்றவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குகிறோம்.
சிறிய உதவி பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தும்
தானம் கொடுப்பதால்
யாரும் ஏழையாகியதில்லை
உங்களிடம் போதுமான சிரத்தை இல்லை; உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை, பிறகு உங்களால் என்ன சாதிக்கமுடியும்? உங்களிடம் பண பலமும் இல்லை, ஆன்மீக முன்னேற்றமும் இல்லை. நான் சொன்ன இந்த வழியில் திறமையை காட்டி பணக்காரனாகி வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்து. தற்காலக் கல்வி, உங்கள் நடை, உடை, பாவனைகளை, மாற்றிவிட்டன. ஆனால் செல்வத்தை சம்பாதிப்பதற்கான புதிய வழிகளை, உங்களிடம் அறிவு இல்லாததால் இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
அந்த வழி உன் கைகளில் இருக்கிறது, உன் கண்களை நீயே கட்டிக் கொண்டு “நான் குருடாகி விட்டேன், என்னால் பார்க்க முடியவில்லை” என்று கூறுகிறாய், கண்களைக் கட்டியிருக்கும் கட்டுகளைக் கிழித்து எறி, இந்த உலகம் முழுவதும், நண்பகல் சூரியனின் ஒளி மிக்கக் கதிர்களால் நிறைக்கப்பட்டிருப்பதை
நீ காண்பாய்.
– சுவாமி விவேகானந்தர்
நீங்களும் நன்கொடை செலுத்தலாம்
இன்றே உங்கள்
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.
இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கல்வி
சுவாமி விவேகானந்தரின் சொந்த வார்த்தைகளில்:
“பண்டைய பாரம்பரியம் மற்றும் மரபுகளை அப்படியே வைத்திருத்தல், இன்னும், அதனுடன் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ப்பது.”
“வாழ்க்கையை கட்டியெழுப்புதல், மனிதனை உருவாக்குதல் மற்றும் குணாதிசயங்களை உருவாக்குதல் போன்ற சிந்தனைகளை நாம் கொண்டிருக்க வேண்டும்.”
“கருத்தரிக்க மூளை, உணர இதயம் மற்றும் வேலை செய்ய கைகள்.”
“கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள பரிபூரணத்தின் வெளிப்பாடு.”
கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கருத்துக்கள் இந்த சூழலில் மிகவும் பொருத்தமானவை:
“மாணவர் மதிப்புகளைப் பற்றிய புரிதலையும் உயிரோட்டமான உணர்வையும் பெறுவது அவசியம். அவர் அழகான மற்றும் தார்மீக நன்மை பற்றிய தெளிவான உணர்வைப் பெற வேண்டும். இல்லையெனில், அவர் தனது சிறப்பு அறிவைக் கொண்டு இணக்கமாக வளர்ந்த நபரைக் காட்டிலும் நன்கு பயிற்சி பெற்ற நாயைப் போலவே இருக்கிறார்.
ஏழைகளுக்கு நிதி உதவி
வறுமையில் வாடும் ஏழை மக்களின் துன்பத்தை நீக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே நமது
ATVS TRUST நோக்கம்
இந்தியாவின் ஆன்மீகக் கலாசாரமும், மேற்கத்திய நாடுகளின் கருத்துச் சுதந்திரம், சுமூக நீதி, பண்பாடு ஆகியவையும் ஒன்றினைந்த சமுதாயமே, இலட்சிய சமுதாயம் என்பது விவேகானந்தர் கருத்து, ஆன்மிகப் பணிகளும் சமூகப்பணிகளும் செய்து இந்த இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, இந்தியாவில் ராமகிருஷ்ண மிஷினை நிறுவினார். துவக்கத்திலிருந்தே ராமகிருஷ்ண மிஷன் மக்கள் தொண்டில் மிகச்சிறந்து விளங்கியது. வேதாந்தம் எல்லோருக்கும் உகந்த, எல்லோருக்கும் பொதுவான, எல்லோரையும் உயர்நிலைக்கு இட்டுச் செல்கின்ற தத்துவத்தையும் வாழ்க்கை முறையையும் கொண்டது என்பதை உபதேசித்ததுடன் கூட, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய பல நாடுகளில் வேதாந்த மையங்களையும் நிறுவினார். இந்தியாவின் தவப்புதல்வர்களில் சிறந்தவர்களில் ஒருவரான விவேகானந்தர், இந்தியப் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.
இதன் பாதம் தொட்டே
நமது ATVS TRYST
குருஜி மல்லூர் சித்தர் அவர்களால் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
குலத்திற்கே நலன் தரும் ஓர் வேண்டுகோள்
தன்னிடமே இருக்கும் பணம் தன்னிறைவைத் தருவது இல்லை !
தானமாகத் தந்த பணம் தன் குலம் காக்கும் சந்தேகமில்லை !