who we are

About ATVS TRUST

இதயத்தை இறைவன் மேல் வைப்போம்
கைகளால் சேவை செய்வோம்

நமது நாட்டு ஏழைகளுக்கு உணவில்லாமல் பட்டினி கிடப்பதைக் காணும் போது , பூஜை முதலியவற்றையும் , கல்வியையும் தூர எறிந்துவிட்டு , சாதனையாலும், புலனடக்கத்தால் வந்த ஆற்றலாலும், பணக்காரர்களின் மனதை திருப்பி, பணம் திரட்டி, ஊர் ஊராகச் சென்று ஏழைகளுக்கு தொண்டுபுரிவதில் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு உண்டாகிறது   

– சுவாமி விவேகானந்தா 

N

குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

குரு : கு – என்றால் இருட்டு, ரு – என்றால் வெளிச்சம், குரு என்றால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து செல்பவர் என்று அர்த்தம்.

1836 முதல் 1886, வரை இந்த பூமி கிரகத்துக்கு விஜயம் செய்த…   …அவதார புருஷர்,

காளி கோவில் பூசாரியாக இருந்து, பூஜை செய்து காளியை நேரில் தரிசித்த…   …பரமஹம்சர்,

இறைவனை நம் வாழ்க்கை துணைக்கு அழைக்கும், வழியை காட்டும்…   …குருதேவர்,

அன்னை சாரதையை மணந்து, மனைவியை தெய்வமாக்கிய நல்ல…   இல்லறத்தான்.

N

அன்னை ஸ்ரீ சாரதா தேவி

அன்னை ஸ்ரீ சாரதா தேவி அவதார புருஷர் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஆதாரமாக அவதரித்தவள். 1853ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் நாள் கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற குக்கிராமத்தில் பிறந்தார்.

குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது 23ம் வயதில் 5 வயது அன்னை ஸ்ரீ சாரதையை தனது மனைவியாக தேர்ந்தெடுத்து வாழ்க்கை துணைவியாக ஆக்கிக் கொண்டார். அன்னை தனது 19ம் வயதில் 1872 முதல் 1885 வரை 13 ஆண்டுகள் தட்சிணேசுவரக் காளி கோவிலில் குரு தேவருடனேயே வாழ்ந்து அவருக்கு சேவை செய்தார். 1886 ஆகஸ்ட் 16ல் குருதேவர் மறைந்தார். குருதேவரின் மகா சமாதிக்குப் பின் துறவியருக்கும் இல்லறத்தாருக்கும் மந்திர தீட்சை வழங்கி ஆன்மீக வழிகாட்டி ராமகிருஷ்ண இயக்கத்தை வழி நடத்தி சென்றார்.

சுவாமி விவேகானந்தரின் பல வெற்றிகளுக்கு வழிகாட்டியும்  அன்னை சாரதையே ஆவார்.

1920 ஜூலை 20 நள்ளிரவு 1.30க்கு அன்னை மகா சமாதி அடைந்தார்.

N

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் வரலாறு

இயற்பெயர் : நரேந்திரநாத் தத்தா

பிறந்த தேதி : 1863 ஜனவரி 12 திங்கட்கிழமை பொங்கல் திருநாள்

பிறந்த நேரம் : காலை 6.00 மணி 33 நிமிடம் 33 வினாடி

பிறந்த திதி : கிருஷ்ண சப்தமி திதி

பிறந்த ராசி : கன்னிராசி

பிறந்த நட்சத்திரம் : ஹஸ்த நட்சத்திரம்

பிறந்த இடம் : கொல்கத்தா நகரம்

பிறந்த தெரு : கௌர் மோகன் முகர்ஜி தெரு

உடலில் வாழ்ந்த இறுதி நாள் :

1902 ஜூலை 4ந் தேதி இரவு 9.00 மணி

தாத்தா பெயர் : துர்க்கா பிரசாத்

பாட்டி பெயர் : சியாமா சுந்தரி

அப்பா பெயர் : விசுவநாத தத்தர்

அம்மா பெயர் : புவனேசுவரி தேவி

குருவின் பெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

N

ATVS TRUST நாங்கள் யார் ?

🏵️நாங்கள் குருஜி மல்லூர் சித்தர் அவர்களின் தலைமையின் கீழே மக்கள் சேவை  செய்கிறோம்.

💐 இதன் ஸ்தாபகர் *குருஜி மல்லூர் சித்தர் யார் ?*💐

🔥குருஜி மல்லூர் சித்தர் அவர்கள்
சேலம் மாவட்டம் ,
மல்லூர் பேரூராட்சியில்
1960 ம் ஆண்டு பிறந்தவர்.

🔥இவர் சிறு வயது முதலே
சுவாமி விவேகானந்தரின் மீது ஈடுபாடு கொண்டவர் ,

🔥பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்,

🔥குருஜி மல்லூர் சித்தர்அவர்கள்,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின்
அகிலஉலக தலைவராக இருந்து,
மகா சமாதியடைந்த
சுவாமி ரங்கநாதானந்தஜி மகராஜ் அவர்களிடம்
1992 ம் ஆண்டு “மந்திரதீட்சை” பெற்றவர்,

🔥இவர் 1997 முதல் ஆன்மீக பணியாக ,.
🔥”ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா ஆன்மீக மையம் ”
என்ற அமைப்பை உருவாக்கி

🔥அன்னதான சேவை.

🔥கல்வி சேவை.

🔥மருத்துவ  சேவை.

🔥கலாச்சாரம் – ஆன்மீக மேம்பாடு.

🔥கிராமப்புற மேம்பாடு.

🔥மற்றும் பலவித மக்கள்  சேவைகள் செய்து வருகிறார்.

🔥குருஜி மல்லூர் சித்தர் தனது
🔥60 வது வயதில்,
🔥47 வருட ஆன்மீக அனுபவம் மற்றும்
🔥43 வருட மார்க்கெட்டிங் அனுபவத்தால்
உருவானது தான் ATVS TRUST – “அன்புடன் தரும் விவேகானந்தா சேவா டிரஸ்ட்”  ஆகும்.

🔥குருஜி மல்லூர் சித்தர் அவர்களின்
❄️விவேகா சேவகர் குழுவில் ❄️

🔥நீங்களும் உறுப்பினராக  சேர்ந்திட  உங்களை
❄️அன்புடன் அழைக்கிறோம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

🌀*"ATVS TRUST" ன் நன்கொடை திட்டம் என்ன ?*

ATVS TRUST

விவேகா சேவகர் குழுவில் , நீங்களும் உங்களைப் போன்றவர்களும், உறுப்பினராக சேர்ந்ததின் மூலம், கிராமப்புற ஏழை மாணவ , மாணவிகளின், வாழ்வாதார மேம்பாடு, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்றையும் பெற்று அவர்கள் நவீன இந்தியாவின் சிறந்த குடிமக்களாக, உருவாக நீங்கள் அவர்களுக்கு எங்கள் மூலம் வழிகாட்டுகிறீர்கள் என்பதை *”மகிழ்ச்சியுடன் நினைவு கொள்ளுங்கள்”*.

🌀*ATVS TRUST - உங்களுக்கு செய்யும் சேவை என்ன ?*

நீங்கள் வழங்கும் நன்கொடைக்கு நாங்கள் உங்களுக்கு செய்யும் சேவை என்னவென்றால் உங்களிடம் நீங்காமல் நிறைந்திருக்கும் வெட்கம், வெறுப்பு, பயம் இவை உங்களை விட்டு போக உங்கள் பகுதி வாட்ஸ் அப் குழு, டெலிகிராம் குழு, ஃபேஸ்புக் உறுப்பினர் குழு, மற்றும் இமெயில் சேவை மூலம் உங்களுக்கு சுவாமி விவேகானந்தரின் செய்திகளை வழங்கி உங்களை நல்வழிப்படுத்த ஆக்கப்பூர்வமான ஆற்றல் நிறைந்த பதிவுகள் இடப்படும்.

🌀உங்கள் நண்பர்களை அந்தந்த பகுதிகளுக்கு என நாங்கள் உருவாக்கும் குழுக்களில் இணைப்போம். அவர்களுக்கும் உங்கள் மூலம் சேவை செய்வோம்.

நாம்

🌀1 ஆண்டு,

🌀1 லட்சம் குழுக்கள் ,

🌀1 கோடி சுவாமி விவேகானந்தரின் சீடர்களை உலகம் முழுதும் உருவாக்குவோம் .

🌀நீ இந்த சேவைகள் செய்திடு! செழிப்பாக வாழ்ந்திடு!!

🌀*இன்றைய கிராமப்புற மக்களிடம் நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றம் என்ன ?*

இயலாமை , குழந்தைகள் நலன், கல்வி , ஆரோக்கியம் . சமூக மேம்பாடு . வாழ்வாதாரம் , பெண்கள் நலன் , கலை மற்றும் கலாசாரம் , முதியவர்கள் நலன், சுற்றுச்சூழல் , பேரிடர் மேலாண்மை , சமூக மாற்ற நிதி , இவைகளில் நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றத்தைத் தேர்வுசெய்து, அந்த மாற்றத்தை உருவாக்கும் நபராக நீங்கள் இருக்க நாங்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம்.

🌀*இன்றைய கிராமப்புற மக்களிடம் மாற்றம் வர நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?*

“ATVS TRUST”, நன்கொடையாளர்களான உங்களுக்கு தனித்துவமான, ஒரு வித்தியாசமான வாய்ப்பை வழங்குகிறது.

எங்களைப் பொறுத்தவரை நீங்கள் நன்கொடை அளிக்கும் தொகை , சிறியதானாலும் அதன் ஆற்றல் பெரியது இதன் மூலம் பலவித ஏழை மக்கள் பயனடைவார்கள். உங்கள் நன்கொடையின் மூலம் நீங்கள் “கொடுப்பது” மாதம்தோறும்  ரூ .100 அல்லது வருடம்  ரூ .1200 இதன் மூலம் நீங்கள் இப்போது தன்னார்வ தொண்டு நிறுவனமான எங்களது ” ATVS TRUST” உறுப்பினராக இணைக்கப்படுவீர்கள்.

“ATVS TRUST” மிகவும் தகுதியான பயனாளர்களை தேர்ந்தெடுத்து, உங்கள் சார்பாக அவர்களுக்கு பலவித நலத்திட்ட உதவிகள் செய்யும்.

ATVS TRUST ல் இந்த முதன்மைதிட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், கிராமப்புறத்தில் 13 வயது வரை இருக்கும் பள்ளி மாணவர் , மாணவியர்களிடம் ஒரு ஆக்கபூர்வமான வித்தியாசத்தை ஏற்படுத்த விரும்பும் நபர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான திட்டமாகும், ஆனால் இதற்கு நீங்கள் எங்களுடன் தொடர்ந்து இணைந்திருந்து எங்களது ATVS TRUST ன் சமூக மாற்ற நிதியை ஆதரியுங்கள்.

எங்களின்

தொண்டர்,

நன்கொடையாளர்,

உறுப்பினர்

வரிசையில்

நீங்களும்

இன்றே

சேர்ந்திடுங்கள்..

Email: admin@atvstrust.org

Call Anytime: +91 9344300479 – 9360676665

Share with: